தனது வகுப்பு ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி பேஸ்புக் மூலம் விற்க முயன்ற மாணவன்!
ஆசிரியரின் மோட்டார் சைக்களை திருடி பேஸ்புக் மூலம் விற்க முயற்சித்த குறித்த ஆசிரியரின் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (14) இரவு நாரம்மல பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள், அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவர் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் அவரது வகுப்பு மாணவன் ஒருவன் தனது முகநூல் பக்கத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் விற்பனை தொடர்பாக வெளியிட்ட விபரங்களை பார்த்தபோது,
தான் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போன்றே விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ள சைக்கிளும் காணப்பட்டதை ஆசிரியர் அவதானித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து,
பன்னல மாகந்துர பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்டபோது, மோட்டார் சைக்கிளுடன் அதனை கொண்டு வந்த நபரையும் கைதுசெய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.