ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளர் மீது சரமாரி தாக்குதல், தங்கியிருந்த வீட்டின் மீதும், காவலாளி மீதும் தாக்குதல்...!

ஆசிரியர் - Editor I
ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளர் மீது சரமாரி தாக்குதல், தங்கியிருந்த வீட்டின் மீதும், காவலாளி மீதும் தாக்குதல்...!

ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரான ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் மீது நேற்றுமுன்தினம் 30ம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் தங்கிருந்த வீடும் சேதமாக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நீர்கொழும்பு - கோப்பியாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

தாக்குதலுக்குள்ளானவர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், காவலாளியும் இந்த சம்பவத்தின் போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தொழிற்சாலையில் அமைந்துள்ள பங்களாவிலேயே குறித்த நிறுவனத்தின் உரிமையாளராக ஓமானைச் சேர்ந்த நபர் தங்கி இருந்துள்ளார். 

இதன்போது, ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களுடன் வந்து இவரை கைகளால் தாக்கியுள்ளனர். 

அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிணையும் சேதப்படுத்தியுள்ளனர். 

சம்பவத்தின்போது பங்களாவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக படல்கம பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு