SuperTopAds

போரினால் பிரிந்த தம்பதி 33 வருடங்களுக்குப் பின் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
போரினால் பிரிந்த தம்பதி 33 வருடங்களுக்குப் பின் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம்..

போரினால் பிரிந்த தம்பதிகள் 33 வருடங்களுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு 

வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் 

மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர். திருகோணமலையில் வசித்த குறித்த தம்பதிகள் போர்ச்சூழலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 

சில குழந்தைகளை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு குழந்தையுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து கொழும்பிற்கு வந்துள்ளார். 

அன்றிலிருந்து 33 ஆண்டுகளாக விகாரைகள், தேவாலயங்கள், பொது இடங்களில் பலதரப்பட்டவர்களின் உதவியால் வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும் அவருடன் வந்த குழந்தை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.