வீட்டில் தகராறு, நிறைவெறியில் ரயிலை நிறுத்த முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்!

ஆசிரியர் - Editor I
வீட்டில் தகராறு, நிறைவெறியில் ரயிலை நிறுத்த முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்!

ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்தப்போவதாக கூறி நிறைபோதையில் ரயில் முன் நின்ற குடிமகன் மீது ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த ரயில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்தது.

காயமடைந்தவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கோபமடைந்த அவர் நிறைபோதையில் ரயில் பாதையில்  நின்று ரயிலை நிறுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய நபர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த நபர் அதே ரயிலில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காயமடைந்த நபர் ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு