நிலைத்தன்மை அறிக்கையிடலுக்கான இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியை மீள் உறுதி செய்துள்ள ACCA

ஆசிரியர் - Admin
நிலைத்தன்மை அறிக்கையிடலுக்கான இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியை மீள் உறுதி செய்துள்ள ACCA

2022ம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகளுக்கான தெரிவின் போது இலங்கையின் வங்கிகள் மத்தியில் மிகச் சிறந்த நிலைத்தன்மை அறிக்கையிடல் வங்கியாக கொமர்ஷல் வங்கியை இலங்கையின் பட்டய சான்றிதழ் கணக்காளர் நிறுவனம் Association of Chartered Certified Accountants (ACCA) பிரகடனம் செய்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியின் மிகச் சிறந்த வெளிப்படைத்தன்மைரூபவ் பொறுப்புக் கூறல் மற்றும் மிகவும் பொறுப்பான நிறுவனம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. 2021ம் ஆண்டுக்கான வங்கியின் அறிக்கைக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி அதன் கூட்டாண்மை நிகழ்ச்சி நிரலின் கீழ் சமூக மற்றும் சுற்றாடல் விடயங்களில் அது காட்டி வரும் கரிசணையிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சட்டகத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த வருடாந்த அறிக்கையானது வங்கியின் சமூக மற்றும் சுற்றாடல் செயற்பாட்டுத் தாக்கங்களையும் உலகளாவிய அறிக்கையிடல் முன்முயற்சி (GRI) யின் முக்கிய விருப்பத்துக்கு ஏற்ப பிரதிபலிக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிலைத்தன்மை அபிவிருத்தி இலக்குகளுக்கு வங்கியின் பங்களிப்புக்கள் பற்றிய விவரங்களையும் உள்ளடக்கி உள்ளது. 

விரிவான அறிக்கையிடலில் கொமர்ஷல் வங்கியின் உயர் மட்ட தரமானது ஒரு பொறுப்பான நிதி நிறுவனமாக இருப்பதிலும் நிலைத்தன்மை வர்த்தக செயற்பாடுகளை சூழ்ந்துள்ள அதன் தொழில்தர்மத்தின் அர்ப்பணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டிலும் கூட ACCA இன் விருதுகளின் போது கொமர்ஷல் வங்கி 2020 இன் மிகச்சிறந்த நிலைத்தன்மை அறிக்கையிடல் பிரிவில் விருதினை வென்றதற்கு மேலதிகமாக வங்கிப் பிரிவில் முன்னணி வகித்தது. 

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கிரூபவ் கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 270 கிளைகள் மற்றும் 950 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு