சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்கியுள்ளது...! முதற்கட்ட நிதி மிக விரைவில் என எதிர்பார்ப்பு...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக சீனா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.
சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் உத்தரவாதம் வழங்க தாமதித்தமையினாலேயே சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.9 பில்லியன் அமொிக்க டொலர் கடனுதவி
திட்டமும் தாமதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனாவின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் இம்மாத முற்பகுதிக்குள்
முதற்கட்ட நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து உலக வங்கியின் 1.5 பில்லியன் நிதியும் கிடைக்கப்பெறும்.