பிரான்ஸ் கடற்கரையில் வரிசை வரிசையாக கரையொதுங்கிய பைகள்!! -சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி-
பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை மீட்டு சோதனையிட்ட பொலிசார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள நெவில் கடற்கரையில் பல பிளாஸ்டிக் போத்தல்கள் கரையொதுங்கின. அவற்றை மீட்டு சோதனையிட்ட பொலிசார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை, விக்சூர் மேற்கு கடற்கரையில் மேலும் ஆறு பைகள் கரையொதுங்கின. மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டொன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு அந்த போதைப்பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த போதைப்பொருளின் மதிப்பு 150 மில்லியன் யூரோக்களாகும். அந்த போதைப்பொருள் பாக்கெட்கள் எப்படி அந்த கடற்கரைக்கு வந்தன, திரைப்படம் ஒன்றில் வருவதுபோல, பொலிசாரைக் கண்டதும், பிறகு எடுத்துக்கொள்ளலாம் என பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கடத்தல்காரர்கள் தண்ணீரில் அவற்றை வீசினார்களா.
அல்லது அண்மையில் படகின் எடையைக் குறைக்க குழந்தைகளை தண்ணீரில் வீசியதுபோல போதைப்பொருள் பாக்கெட்களை வீசினார்களா?
அவை எந்த நாட்டிலிருந்து வந்தவை என்பது உட்பட எந்த தகவலும் தெரியாத நிலையில், விமானம் மூலம் குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.