காதலர்களை கண்டித்ததால் பொது இடத்தில் கட்டிப்பிடித்து போராட்டம்! பேராதனை பல்கலைகழகத்தில்...
பேராதனை பல்கலைகழகத்தில் காதலர்களிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாணவன் ஒருவனும் மாணவி ஒருவரும் கட்டிப்பிடித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
உண்மையான அன்பு என்றால் என்னவென்பதை ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு பொறுப்பான அதிகாரிகளிற்கு காண்பிப்பதற்காக அவர்கள் கட்டியணைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளிற்கு பொறுப்பான அதிகாரி தங்களை அவமதித்தார் இழிவுபடுத்தினார் மாணவர் அட்டையை எடுத்துச்சென்றார் என ஆண் மாணவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் எந்த பகுதியிலும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வலியுறுத்தி இவ்வாறான செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இந்த வீடியோ குறித்து சமூக ஊடகத்தில் கருத்தை பதிவிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய பேராதனை பல்கலைகழகம் தனது அனைத்து கலாச்சார கொள்கைகளையும் கைவிட்டு
மீண்டும் பேராதனை பல்கலைகழகமாக மாறுகின்றது என குறிப்பிட்டுள்ளார். அவர்களிற்குஎங்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.