மாதவிடாய்க்கு விடுமுறை!! -பெண்களுக்காக ஸ்பெயின் அரசு நிறைவேற்றிய புதிய சட்டம்-

ஆசிரியர் - Editor II
மாதவிடாய்க்கு விடுமுறை!! -பெண்களுக்காக ஸ்பெயின் அரசு நிறைவேற்றிய புதிய சட்டம்-

பெண் பணியாளர்கள் தமது மாதவிடாயின் போது விடுமுறை பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்பெயின் அரசி அறிவித்துள்ளது.

பெண்கள் தமது மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்களை உணர்ந்து பல வலிகளை அனுபவிக்கின்றார்கள்.

மாதவிடாய் வலியானது தொடைகள், கால்கள், கீழ் முதுகு, மற்றும் சிலநேரங்களில் மார்புப்பகுதிக்கும் பரவக் கூடிய மாதவிடாய் காலத் தசைப்பிடிப்புகளாக கீழ் இடுப்புப் பகுதியில் உணரப்படுகிறது. 

இந்த வலியானது 4 முதல் 5 நாட்கள் வலியை தருகின்றது. இது அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. இதனால் ஸ்பெயின் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது,

பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் பெருமையை பெற்று பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

அதில், பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு மற்றும் திருநங்கைகளின் உரிமைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான சட்டங்களை ஸ்பெயின் நிறைவேற்றியது.

அமைச்சர் ஐரீன் மான்டெரோ நாடாளுமன்றத்தில்“பெண்களின் ஆரோக்கியத்திற்கு, இந்த முடிவு முக்கியமானது. இந்தச் சட்டம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பணம் செலுத்தாமல் இருப்பதற்கான உரிமையை வழங்குகிறது.

மாதவிடாய்க் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு  விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மாதவிடாய் விடுப்புக்கு அரசு நிதியுதவி அளிக்கும்” என கூறியுள்ளார்.

இவ்வாறு சிறந்த சட்டத்தை நிறைவேற்றியதால் பல நாடுகள் ஸ்பெயினுக்கு வாழ்த்தை தெரிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு