கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது
கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதானவராவார்.
இக்கைது நடவடிக்கையானது திங்கட்கிழமை இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய சம்மாந்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து 4 கிலோ 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயகட்டளையிடும் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நெத்தசிங்கவின் உத்தரவில் அம்பாறை மாவட்ட கட்டளை அதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.பி.எஸ்.எம் ரத்னமலல உள்ளிட்ட முகாம் அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.