SuperTopAds

தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் படுகாயமடைந்த ஒருவர் மரணம்!

ஆசிரியர் - Editor I
தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் படுகாயமடைந்த ஒருவர் மரணம்!

அரசுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஒழுங்கமைப்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(26) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதன்போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.