SuperTopAds

பிறந்து 18 மாதங்களேயான சிசுவையும், 9 வயது மகனையும் பாலத்தில் விட்டு 40 உயரத்திலிருந்து ஆற்றில் குதித்த தாய்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 18 மாதங்களேயான சிசுவையும், 9 வயது மகனையும் பாலத்தில் விட்டு 40 உயரத்திலிருந்து ஆற்றில் குதித்த தாய்..

பிறந்து 18 மாதங்களேயான சிசுவையும் 9 மகனையும் பாலத்தில் விட்டு 40 உயாத்திலிருந்து ஆற்றில் குறித்த தாயை இளைஞன் ஒருவன் காப்பாற்றி கரை சேர்த்துள்ளான். 

குறித்த சம்பவம் பெந்தர ஆற்றில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து குறித்த பெண் நீரில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் காப்பாற்றியுள்ளான். பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், 

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.