போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த 22 வயதான போலி வைத்தியர் சிக்கினார்! போதைப் பொருட்கள், துப்பாக்கி ரவைகள் மீட்பு...
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள், துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.
ஹொரணை தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் வைத்தியரிடமிருந்து உத்தியோகபூர்வ முத்திரையை திருடி
அங்குருவாதொட்ட கல்பத்த பிரதேசத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் மருந்துகளை குறித்த நபர் விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது கல்பத்த முல்கொடகந்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 7 கிராம் போதைப்பொருள், 20 வெவ்வேறு போதை மாத்திரைகள், மருத்துவரின் உத்தியோகபூர்வ முத்திரை
மற்றும் இரண்டு T56 துப்பாக்கி தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபரை கைது செய்த பின்னர், வீட்டை சோதனை செய்தபோதே,
ஒரு சிறிய பெட்டியில் சில போதைப்பொருட்கள், மருத்துவரின் உத்தியோகபூர்வ முத்திரை போன்ற இரண்டு T-56 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதான சந்தேக நபர் 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.