200 ஏக்கர் அரச காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு கொடுத்த அரசியல்வாதி சிக்கினார்!
200 ஏக்கர் அரச காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு கொடுத்து 24 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் - மஹகும்புக்கடலை பகதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. புத்தளம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் 50 வயதுடைய முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.