யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் கட்சி அலுவலகம் அல்ல, கட்சியை குறிக்கும் வர்ணங்கள் அகற்றப்படும்! யாழ்.மாவட்டச் செயலர்...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் கட்சி அலுவலகம் அல்ல. கட்சியை குறிக்கும் வர்ணங்கள் இடம்பெறமுடியாது. உடனடியாக அகற்றப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தொிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க அதிபரிடம் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு அலுவலமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால்
அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதி அளித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில்
மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தூசு தட்டி தூய்மையாக்கப்படுகின்றது.