வந்தார்களா? நான் எதனையும் அறியவில்லை, வெளிவிவகார அமைச்சர் பதில்...
அமொிக்காவின் பாதுகாப்பு தலைமையகத்தை சேர்ந்த 22 பேர் கொண்ட குழு ஏன் இலங்கைக்கு வந்தார்கள்? என்ன பேசினார்கள்? என்பது தொடர்பாக நான் அறியவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்ற புதன்கிழமை (22) தேசிய சுதந்திர கட்சியின் தலைவர் வில் வீரசன்ச இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் உரையாற்றி,
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் விக்டோரியா நூலண்ட்டின் வருகையை தொடர்ந்து பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்தார்கள்.
இவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்? எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்கள்? என்பதை ஆளும் தரப்பின் பிரதம கொறடா அறியாவிட்டாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவார்கள்.
ஆகவே அவர்கள் உண்மை விடயத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து வெளிவிவகாரததுறை அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முதலீடு சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும்.
ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்? எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்? என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவாரா, அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்? எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்? என்பதை அறியவில்லை என குறிப்பிட்டார்.