இன்று யாழ்ப்பாணம் வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ...!

ஆசிரியர் - Editor I
இன்று யாழ்ப்பாணம் வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ...!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிறேமதாஸ இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

இன்றைய விஜயத்தின்போது பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று (23) காலை 10 மணிக்கு அனலைதீவிலும் மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும் மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும் 

மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும்மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்கின்றார்.

இதன்போது சர்வ மதத் தலைவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை (24) காலை 9.30 நாச்சிகுடா சந்தி10.30 மணிக்கு கிளிநொச்சியிலும் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்வுள்ளதாக 

ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட அமைப்பாளர் எஸ்.விஜயகாந்த் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு