இலங்கையில் இன்று காலை 11.44 மணியளவில் மீண்டும் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம்!
இலங்கையில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் மீண்டும் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.