யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்றுள்ளதா? பரிசோதனை குறித்த தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதா? வினவும் ஜனாதிபதி ஊடக பிரிவு...
யாழ்.போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமித் தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நீர் பரிசோதனை மேற்கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகால்மைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஊடகங்களுக்கு தகவலை வழங்காது ஏன் மறைத்தார்? என ஜனாதிபதி ஊடகப்பிரிவு நீர்வழங்கல் அமைச்சிடம் வினவியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கிருமி தோற்று பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் குடிநீரின் மாதிரி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய நிர்வாகத்தால் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை குடிநீரில் கிருமி தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட பொறியியலாளர் ஜெகதீஸ்வரனை வினாவி இருந்தனர்.
எனினும் குறித்த அதிகாரி அது இரகசியமானது வெளியிட முடியாது என பதில் அளித்திருந்தார். இருப்பினும் ஊடகவியலாளர்கள் இது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விடயம் தனிப்பட்ட வீட்டினுடைய குடிநீர் பிரச்சனை அல்ல மக்களை விழிப்படையச் செய்வதற்கு குறித்த அறிக்கையை தொடர்பில் தெளிவு படுத்துமாறு கோரினர்.
எனினும் குறித்த அதிகாரி சட்டச் சிக்கல் வந்தாலும் பகிரங்கப்படுத்த முடியாது என பதிலளித்திருந்த நிலையில் குறித்த விடையம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரதானிக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர்
ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அமைச்சிடன் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.