சொந்த மகளுக்காக வடகொரிய ஜனாதிபதி தனது சகோதரியை கொல்லலாம்!! -எச்சரிக்கும் நிபுணர்கள்-

ஆசிரியர் - Editor II
சொந்த மகளுக்காக வடகொரிய ஜனாதிபதி தனது சகோதரியை கொல்லலாம்!! -எச்சரிக்கும் நிபுணர்கள்-

வடகொரிய ஜனாதிபதி தன் சொந்த மகளுக்காக தனது சகோதரியை கொலை செய்யலாம் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மை நாட்களாக வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மகள் கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக பல பொதுக்கூட்டங்களில் நேரில் கலந்து கொல்கிறார் என்பதுடன், அந்நாட்டு ஊடக பிரபலங்கள் பலர் தெரிவிக்கையில், கிம் ஜோங் உன் ஆட்சி பொறுப்பை தமது மகளிடம் ஒப்படைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

மட்டுமின்றி, ஒருகட்டத்தில் அந்நாட்டின் முகமாக அறியப்பட்ட கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் அண்மை காலமாக பொதுவெளியில் எங்கும் காணப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிம் ஜு ஏ என்பவர் கிம்மின் மகள் எனவும், இனி அவர் கிம்முடன் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்வார் என வடகொரிய நிர்வாகம் 2022 நவம்பர் மாதத்தில் தான் உறுதி செய்தது.

முன்னர் தமது சகோதரி யோ ஜோங்கின் அரசியல் நகர்வுகளை கிம் ஜோங் ஆதரித்து வந்துள்ளதுடன், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் அனுப்பி அரசு சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அனுமதித்திருந்தார்.

கிம் ஜோங் ஏற்கனவே தமது தாய்மாமா மற்றும் உடன் பிறவா சகோதரரை அரசியல் காரணங்களுக்காக பலிவாங்கியுள்ளார். அடுத்த இலக்கு யோ ஜோங்காக இருக்கவே வாய்ப்பு என சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முன்னாள் மூத்த இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டத் தொடங்கியதும், சர்வதேச பார்வையை தம்பக்கம் திருப்பியதும் யோ ஜோங்கை கிம் ஜோங் புறக்கணிக்க காரணமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது சாத்தியமான அல்லது அரசியல் வாரிசாக தமது சகோதரியை வெளி ஊடகங்கள் கட்டமைப்பதை கிம் ஜோங் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார் எனவும் கூறுகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு