SuperTopAds

பிற்போடப்படும் நிலையில் உள்ளூராட்சி தேர்தல்! தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கமளிப்பு..

ஆசிரியர் - Editor I
பிற்போடப்படும் நிலையில் உள்ளூராட்சி தேர்தல்! தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கமளிப்பு..

உள்ளூராட்சி தேர்தலுக்கான பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யாவிட்டால் தேர்தலை பிற்போடும் நிலையே உருவாகும். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் சட்டமாதிபரின் ஒத்துழைப்பு போதுமானதாக அமையவில்லை, 

ஆகவே தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட அவதானம் செலுத்தியுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அரசியல் கட்சி செயலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சிடல்,தேர்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கிடல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்திற்குள் உறுதியான தீர்வை எடுக்காவிட்டால் திட்டமிட்ட வகையில் உரிய திகதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாகும்.

ஆகவே நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சி செயலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

ங்கு இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடல் நடவடிக்கைகள் தற்போது தடைப்பட்டுள்ளன. வாக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகளுக்கு தடையேற்படும்போது 

அரச நிறுவனங்களினால் தனித்து செயற்பட முடியாது. ஆகவே வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகள் தாமதமானால் தபால் மூல வாக்கெடுப்பை பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான பணிகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.இருப்பினும் திறைச்சேரி நிதி ஒதுக்குவதை தாமதப்படுத்தினால் 

எம்மால் அடுத்தக்கட்ட பணிகளை தொடர முடியாது.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் சட்டமாதிபரின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச்சீட்டுகளும் தபால் திணைக்களத்திற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும், 

தபால் மூல வாக்கெடுப்பிற்கான வாக்குச் சீட்டுகள் இன்று முதல் விநியோகிக்கப்பட வேண்டும், ஆகவே இந்த பிரச்சினைக்கு இந்த வார காலத்திற்குள் உரிய தீர்வை எடுக்காவிட்டால் எதிர்வரும் 22 ஆம் திகதி திட்டமிட்ட வகையில் 

தபால்மூல வாக்கெடுப்பை கோருவதில் பாதிப்பு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.

வழங்கிய வாக்குறுதியை பின்பற்றுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது, இதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும்.

என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தை நாடுவதை தவிர மாற்றுதிட்டம் ஏதும் எமக்கு கிடையாது. வாக்குச் சீட்டு அச்சிடல் தொடர்பில் உரிய தரப்பினருடனும், 

நிதி ஒதுக்கல் தொடர்பில் திறைச்சேரியிடமும் முக்கிய சந்திப்பில் ஈடுபடுவோம். சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றததை நாடுவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கும் விடயத்தை திறைச்சேரி சுயாதீனமாக தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.