நீதிபதியின் காரை திருடிய நபர் 5 லட்சம் கப்பம் கேட்டு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதால் சிக்கினார்! கார் மீட்பு..
நீதிவானின் காரை திருடிக் கொண்டு தப்பி ஓடிய நபர் வத்தளை - ஒலியமுல்ல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் உத்தியோகபூர்வ காரை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரால் திருடப்பட்டதாக கூறப்படும் காரும் கைப்பற்றப்பட்டது. ஹோமாகம, உடுவான பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில்
சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டையும் சோதனையிட்டபோது, இரண்டு போலி கைத்துப்பாக்கிகள், நான்குமுனைக் கத்திகள், விஷத் திரவம் அடங்கிய போத்தல்
மற்றும் மிளகாய்ப் பொடி அடங்கிய பையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு
நீதிவானுக்கு சந்தேக நபர் விடுத்த அழைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக
பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.