SuperTopAds

என்னை இலங்கை செல்ல விடுங்கள், லண்டன் நீதிமன்றில் கூச்சலிட்ட தமிழ் இளைஞன்!! காரணம் என்ன? பிரிட்டன் படைகளை நோக்கி கத்தியுடன் ஓடியது ஏன்..?

ஆசிரியர் - Editor I
என்னை இலங்கை செல்ல விடுங்கள், லண்டன் நீதிமன்றில் கூச்சலிட்ட தமிழ் இளைஞன்!! காரணம் என்ன? பிரிட்டன் படைகளை நோக்கி கத்தியுடன் ஓடியது ஏன்..?

பிரிட்டனில் கடந்த வருடம் நடைபெற்ற குதிரைப்படை அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர் தன்னை இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறுகோரி நீதிமன்றில் கூச்சலிட்டிருக்கின்றார். 

கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின்போது எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும்,  நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளார்.  

2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களையும் இணையத்தில் பார்வையிட்டுள்ளார். குதிரை காவல்படையினர் தன்னை சுட்டுக்கொல்வார்கள் என்பதற்காகவே தான் அவர்களை நோக்கி கத்தியுடன் ஓடியதாக நீதிமன்றில்  தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னை சுடவேண்டும் என விரும்பினேன் என அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். விசாரணையின்போது அவர் என்னை இலங்கைக்கு செல்லவிடுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.‘F*** off! You can f*** off Britain. I want to go back to Sri Lanka!’

அதன் பின்னர் அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வருடம் அவர் எவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களை நோக்கி ஓடினார் என்பதை நீதிமன்றத்திற்கு அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.