பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு/ ஓரின சேர்க்கையை சட்டரீதியானதாக்கு..! அமொிக்கா - பிரிட்டன் இலங்கை மீது அழுத்தம்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை விடயங்கள் குறித்த அறிக்கை இன்று ஆராயப்பட்டிருக்கின்றது.
இதன்போது அமொிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்க கருதுவதை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ´உலகளாவிய கால ஆய்வு ´ குழு நடத்திய கூட்டத்தில்,
இந்நாட்டின் மனித உரிமைகள் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழுவினால் மீளாய்வு செய்யப்படும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஆய்வுகள் 2008, 2012
மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன. அரசாங்கம் வழங்கிய அறிக்கைகள், மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகள்,
மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புகள், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், பிராந்திய நிறுவனங்கள்
மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது.