நியூசிலாந்தில் தொடர் மழை!! -வெள்ள அவசர நிலை பிரகடனம்-
நியூசிலாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் விதிகள் சேதமடைந்தன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ள அவசர நிலையை எதிர்த்து போராடினர்.
கடுமையான வானிலையை நாட்டின் வடக்கு தீவில் திங்கட்கிழமை எதிர்பார்க்கலாம் என நியூசிலாந்தின் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்தின் வெள்ள அபாய நிலை குறித்து தெரிவித்த அமைச்சர் ஜேம்ஸ் ஷா, இந்த வெள்ள அபாயங்கள் உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பானவை என்று வலியுறுத்தினார்.