முன்னாள் காதலர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்த மணப்பெண்
பெண் ஒருவர் தனது திருமண விழாவிற்கு தனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் அழைத்து ஒரே மேசையில் அமரவைத்த வேடிக்கையான சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.
திருமணத்தில் மணமகளின் முன்னாள் காதலர்கள் கலந்து கொண்ட ஒரு வீடியோ சீன சமூக ஊடக தளங்களில் வைலாகிவருகிறது.
இந்த வீடியோவில், "முன்னாள் காதலர்களுக்கான மேசை' என்று அட்டை வைக்கப்பட்ட மேசை ஒன்றில் குறைந்தது 5 ஆண்கள் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலர்கள் என்பதால், ஒரே மேசையில் அருகருகே உட்கார்ந்திருக்கும் போது ஒருவருக்கொருவர் சங்கடமாக உணர்ந்துள்ளனர்.
அவர்களுடன் ஒரு பெண்ணும் காணப்பட்டார். அவர் அந்த 5 ஆண்களில் ஒருவரது மனைவியாகவோ காதலியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.