புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டிய கனடா அரசு!! -போராடி வென்ற இலங்கை தமிழின்-

ஆசிரியர் - Editor II
புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டிய கனடா அரசு!! -போராடி வென்ற இலங்கை தமிழின்-

கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழர் ஒருவர் தனக்கு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், புலம்பெயர்ந்தவர் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்ட நிலையில் போராடி தன் உரிமையை மீட்டுக்கொண்டுள்ளார்.

திருஞானசம்பந்தர் ‘திரு’ திருக்குமரன் என்பவர் 2012 ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். இலங்கைத் தமிழரான திருக்குமரன், இலங்கையிலும், அவுஸ்திரேலியாவிலும் கல்வி பயின்று வேதியியலில் ஒரு இளம் அறிவியல் பட்டமும் ஒரு முதுகலைப் பட்டயப்படிப்பும் முடித்து அதற்கான சான்றிதழ்களையும் முறைப்படி பெற்றுள்ளார்.

ஆனால், ஒன்டாரியோ கல்லூரியின் ஆசிரியர்கள் (OCT) என்னும் ஆசிரியர்களுக்கான ஒழுங்கமைப்பு, திருக்குமரனின் சான்றிதழ்களை அங்கீகரிக்க மறுத்து, ஆசிரியராக பணியாற்ற அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

ஆகவே, அந்த அமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் திருக்குமரன். சட்ட ரீதியாக அந்த அமைப்பை எதிர்கொள்ள 10,000 டொலர்கள் செலவு செய்துள்ளார் அவர்.

இரு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின், தற்போது அவரது சான்றிதழ்களை அங்கீகரித்து, ஒன்ராறியோவில் கல்வி கற்பிப்பதற்கு அவருக்கு சான்றளித்துள்ளது அந்த அமைப்பு.

தனது குடும்பத்தினர், சகாக்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஆகியோரின் ஊக்குவிப்பு இல்லாதிருந்தால், தன்னால் மட்டும் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்கிறார் திருக்குமரன்.

திருக்குமரன் தனது வழக்கில் வெற்றிபெற்றுவிட்டார் என்றாலும், பல திறமைவாய்ந்த புலம்பெயர்ந்தோர், கனடாவில் இன்னமும் தாங்கள் சார்ந்த துறைகளுக்குள் நுழைய பல தடைகளை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு