தனியார் வங்கியின் ATM இயந்திரத்தை அடியோடு பிடுங்கி சென்ற முகமூடி கொள்ளை கும்பல்! துப்பாக்கி முனையில் பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
தனியார் வங்கியின் ATM இயந்திரத்தை அடியோடு பிடுங்கி சென்ற முகமூடி கொள்ளை கும்பல்! துப்பாக்கி முனையில் பயங்கரம்...

கம்பளை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பிடுங்கிச் சென்றுள்ளனர். 

வாகனம் ஒன்றில் வந்த நால்வர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இன்று அதிகாலை (ஜன 25) 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை கதிரையில் கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் வைப்பு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு 

நவீன வான் ஒன்றில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் சாரதி வாகனத்திற்குள்ளேயே கட்டிப் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு