கரைதுறைப்பற்று பிரதேசசபையை இழந்த தமிழரசு கட்சி! புதுக்குடியிருப்பு பிரதேசசபையை இழந்த ஈ.பி.டி.பி..

ஆசிரியர் - Editor I
கரைதுறைப்பற்று பிரதேசசபையை இழந்த தமிழரசு கட்சி! புதுக்குடியிருப்பு பிரதேசசபையை இழந்த ஈ.பி.டி.பி..

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு தேர்தல் மாவட்டத்தில் 4 பிரதேசசபைகளுக்காக 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.விமலநாதன் அறிவித்துள்ளார். 

இதன் படி துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசசபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 8 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 

கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு 12 கட்சிகளும் 2 சுயேட்சைகுழுக்களும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 4 கட்சிகளினதும் சுயேட்சைக்குழு ஒன்றினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஜக்கியமக்கள் கட்சி, அபிநவ நிதாஸ்பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உரிய பெண்வேட்பாளர்கள் உள்வாங்கப்படாமை உரிய முகவர்களால் வேட்புமனு கையளிக்கப்படாமை போன்றவற்றினால் குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு