மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்! சீ.சி.ரீ.வியில் சிக்கிய சந்தேகநபர் கைது..
பல்கலைகழக மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைகழக மாணவன் ஒருவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னர் சந்தேகிக்கப்படும் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொழும்பு குதிரை பந்தய திடலில் படுகொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதுடன்,
அந்த யுவதி பல்கலைக்கழக மாணவி என பின்னர் தெரியவந்துள்ளது. 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவியான இவர்,
விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வருகிறார். குறிப்பாக இக்கொலை தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து,
சந்தேக நபரை விரைவாகக் கைது செய்ய கொழும்பு பிரதேசத்தில் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இதன் விளைவாக நேற்று மாலைக்குள் சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டவுடன்,
அவர் சுற்றித் திரிவதாக சந்தேகிக்கப்படும் பல பகுதிகளுக்கு பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன.
ஆனால் இந்த சந்தேக நபர் வெல்லம்பிட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் இரத்தக்கறை படிந்த பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரான 24 வயது இளைஞனே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த கொலையின் பின்னர் சந்தேக நபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை உறுதியாக கூற முடியாது எனவும் கூறியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.