வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு விசேட சுகாதார வழிகாட்டல் வெளியானது! தடுப்பூசி அட்டை அல்லது பீ.சி.ஆர் அறிக்கை கட்டாயம்..
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டலை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
இது குறித்து அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளதாவது, இலங்கை வருவோர் கொவிட் 19 தடுப்பூசி அட்டை வைத்திருக்கவேண்டும் எனவும்,
கொவிட் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட பிசிஆர் அறிக்கையை
சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு புதிய கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறை
மற்றும் நடைமுறைகளை வௌியிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் ஊடாக நாட்டில் கொவிட் பரவுவதை தடுக்கும் வகையில்
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.