BBL தொடரிலிருந்து வெளியேறுவேன்!! -அவுஸ்திரேலியாவுக்கு ரஷீட் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
BBL தொடரிலிருந்து வெளியேறுவேன்!! -அவுஸ்திரேலியாவுக்கு ரஷீட் எச்சரிக்கை-

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக்கில் (BBL) தொடர்ந்தும் விளையாடுவது குறித்து சிந்திக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட் கான் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கமுடியாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நேற்று அறிவித்திருந்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இந்த தீர்மானம் தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதன் காரணமாக, BBL தொடரிலிருந்து விலகுவதற்கு சிந்திப்பதாக ரஷீட் கான் குறிப்பிட்டுள்ளார்.

ரஷீட் கானின் பதிவில், “அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த தொடரிலிருந்து விலகியமை ஏமாற்றமளிக்கிறது. எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைக்கொள்கிறேன். உலக அளவில் நாம் முன்னேற்றம் அடைந்துவருகின்றோம். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இந்த முடிவு எமது பயணத்துக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது அவுஸ்திரேலியாவுக்கு கடினமாக இருந்தால், BBL தொடரில் நான் விளையாடி யாரையும் அசௌகரியப்படுத்த விரும்பவில்லை. எனவே, இந்த தொடரில் என்னுடைய எதிர்காலம் தொடர்பில் நான் ஆலோசிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

BBL தொடரில் அடிலைட் ஸ்ரைக்கர் அணிக்காக விளையாடிவரும் ரஷீட் கான் 8 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு