SuperTopAds

உணவு ஒறுப்பு போராட்டத்தை கைவிடக்கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ரணிலின் ஆட்கள் கூட்டமைப்பை உடைத்துவிட்டீர்கள் என மறுபக்கம் கூச்சல்...!

ஆசிரியர் - Editor I
உணவு ஒறுப்பு போராட்டத்தை கைவிடக்கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ரணிலின் ஆட்கள் கூட்டமைப்பை உடைத்துவிட்டீர்கள் என மறுபக்கம் கூச்சல்...!

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைய வலியுறுத்தி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். 

இந்நிலையில் அங்குவந்த பொதுமக்கள் சிலர் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட்டீர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள் நீங்கள் என கூச்சலிட்டதை காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தொிவித்தார். 

கடந்த 9ம் திகதி தொடக்கம் வேலுப்பிள்ளை மாதவமேயர் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார். 

இந்நிலையில் அங்குவந்த சிலர் கூட்டமைப்பை உடைத்துவிட்டீர்கள், ரணிலின் ஆட்கள் நீங்கள் என கூச்சலிட்டனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறுகையில், 

மாவீரர்களின் சகோதரன் தேசிய பற்றாளன் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளான். அவரின் கோரிக்கைகள் நியாயமானது இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் சிதறுண்டு வித்தியாசமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். 

இது சவால் மிகுந்த காலம் இந்த காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றாக வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய கருத்தினை முன்வைத்துள்ளார். நான் பேசியதன் அடிப்படையில் அவரின் உயிர்முக்கியம் அவர் காப்பாற்றப்படவேண்டும். 

அவரை தமிழ்தேசியக்கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தற்காலிகமாக போராட்டத்தினை நிறுத்தி ஒரு மக்கள் இயக்த்தினை கட்டிவளர்த்து மத தலைவர்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் மனிதநேய பணியாளர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து 

இந்த பணியினை முன்னெடுக்கும்போது அது வெற்றியினை தரும் அதற்கான முன் முயற்சியினை மேற்கொள்ளுமாறு நான் ஒருகோரிக்கையினை முன்வைத்துள்ளேன். அவரின் முயற்சியினை மதிக்கின்றோம். 

அவர் காப்பாற்றப்படவேண்டும் அதற்காக எவ்வளவுதூரம் எங்களால் ஒத்துளைக்கமுடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.