வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஒத்திவைப்பு!

ஆசிரியர் - Editor I
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஒத்திவைப்பு!

வவுனியா - தொடக்கம் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்  8 ஆம் திகதி வரை வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் வழக்கம்போல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதை இன்று முதல் 5 மாதங்களுக்கு மூடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடக்குப் பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்திய கடன் உதவித் திட்டங்களின் கீழ் வடக்கு ரயில் பாதையைப் பழுதுபார்ப்பதற்காக 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு