தென் கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்கள் மக்கள் முன் சுட்டுக் கொலை!! -வடகொரியா இராணுவம் செய்த கொடுமை-

ஆசிரியர் - Editor II
தென் கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்கள் மக்கள் முன் சுட்டுக் கொலை!! -வடகொரியா இராணுவம் செய்த கொடுமை-

தென் கொரியவின் நாடகம் பார்த்தத குற்றச்சாட்டில் இரு சிறுவர்களுக்கு வடகொரியா இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் கடந்த ஆண்டு தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் 'வீடியோ, சிடி'க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரியாவின் தொலைக்காட்சி நாடகம் பார்த்ததாக கடந்த ஒக்டோபர் மாதம் அந்நாட்டு இராணுவத்திடம் சிக்கினர். 

இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிருபனமானது. இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்து உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு