கொழும்பு தேசிய வைத்தியசாலை மருத்துவர்கள் 4 போின் 2 மாத சம்பளத்தை தனது வங்கி கணக்கில் வைப்பிட்ட அதிகாரிக்கு 10 வருட சிறைத்தண்டணை..!
4 வைத்தியர்களின் சம்பளத்தை தனது 2 தடவைகள் தனது வங்கி கணக்கில் வைப்பு வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சம்பள பிரிவு உதவி முகாமையாளருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா பணித்திருக்கின்றார்.
மேற்படி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குற்றவாளிக்க 10 வருடங்கள் சிறைத்தண்டணை மற்றும் மோசடி செய்த தொகையின் 3 மடங்கை அபராதமாக செல்லுத்துமாறும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
விசாரணையின்போது, வழக்குடன்தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபர் ஒரு கோடியே அறுபத்தாறாயிரத்து எழுநூற்று எழுபது ரூபா தொகையை தன்னால் செலுத்த முடியாது என திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த 10 ஆண்டுகள் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.