புரூஸ் லீ மரணம்!! -50 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்-

ஆசிரியர் - Editor II
புரூஸ் லீ மரணம்!! -50 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்-

மறைந்த தற்காப்புக் கலையின் ஜாம்பவானும், பிரபல நடிகரும்,  புரூஸ் லீ, அதிகளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 இல் பிறந்த தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1973 இல் தனது 32 ஆவது வயதில் அவர் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்ததாக வைத்தியர்கள் நம்பினர்.

புரூஸ் லீயின் மரணத்துக்கு சீனாவைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும் புரூஸ் லீ மரணமடைந்து சுமார் 50 வருடங்களுக்கு பின் அண்மையில் வெளியான புதிய ஆய்வு முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினில் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் கிளினிக்கல் கிட்னி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

புரூஸ் லீயின் மரணத்துக்கு ஹைபோநட்ரீமியா காரணமாக இருந்திருக்கலாம். அதாவது சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்திருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற அவரது சிறுநீரகங்கள் இயலாததால் புரூஸ் லீயின் மரணம் ஏற்பட்டது என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு