அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20 ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு வீசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த வீசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு வீசா கிடைத்த பின்னர், அவர்களையும் அவுஸ்திரேலியா அழைப்பதற்கு அவர் விரும்பியதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு