சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி!! -உச்ச நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வந்தது-
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பொலிஸாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.