SuperTopAds

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் நிதி உதவி...

ஆசிரியர் - Editor I
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் நிதி உதவி...

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதனின் நிதிப் பங்களிப்பில் மன்னார் மாவட்டத்தின் இரண்டு மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு சுழற்சிமுறை கடன் வழங்குவதற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் ஆண்டான்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பெரியகுஞ்சுக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றிற்கு குறித்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிதி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஷ்ட உபதலைவர் ராகவன், ஊடக இணைப்பாளர் இ.தயாபரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் ச.யோகானந்தராசா, மன்னார் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் வரோனிக்கா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.