SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலை வீதியை பயன்படுத்த தடை..! யாழ்.மாநகரசபை - பொலிஸார் கூட்டு நடவடிக்கை, நெருக்கடி தீருமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை வீதியை பயன்படுத்த தடை..! யாழ்.மாநகரசபை - பொலிஸார் கூட்டு நடவடிக்கை, நெருக்கடி தீருமா?

யாழ்.நகரப்பகுதியில் இருந்து சேவை வழங்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சகல பேருந்துகளும் மாற்று வழியில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியால் யாழ்.நகரத்துக்கு வருகின்ற மற்றும் புறப்படும் பேருந்துகளும் ஆஸ்பத்திரி வீதியினால் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று ஒழுங்குகளில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

மேலும் அண்மையில் யாழ்.நகரப்பகுதில் திறந்து வைக்கப்பட்ட தொலைதூர பயணிகள் பேருந்து தரிப்படத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் நெடுந்தூர பயணத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் சேவை வழங்கும்.

அதே நேரத்தில் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் குறித்த தரிப்பிடத்தில் பயணிகளை இறக்க வேண்டும். இந்த நடைமுறைகள் யாவும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் 

ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயல்படும் சாரதிகளுக்கு எதிராகப் பொலிசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.