பாலத்தின் கேபிளை மாற்றாது வர்ணம் பூசி மறைத்த ஒப்பந்ததாரர்!! -141 பேரை காவுகொண்ட கோர விபத்துக்கான காரணம் வெளியானது-

ஆசிரியர் - Editor II
பாலத்தின் கேபிளை மாற்றாது வர்ணம் பூசி மறைத்த ஒப்பந்ததாரர்!! -141 பேரை காவுகொண்ட கோர விபத்துக்கான காரணம் வெளியானது-

தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் முக்கிய கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இச் சம்பவம் தொடர்பில் நடந்த முதல் கட்ட விசாரணையில் அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1879 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணியை முடிக்க டிசம்பர் மாதம் வரை அவகாசம் போரப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26 ஆம் திகதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 141 பேர் உயிர் இழந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு