குஜராத பாலம் விபத்து!! -மாநிலம் முழுவதும் இன்று துக்க நாள் அனுஸ்ரிப்பு-
குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களை அஞ்சலிக்கும் வகையில் இன்று புதன்கிழமை மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுஸ்ரிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 வருடங்கள் பழமையான தொங்கு பாலம் கடந்த திங்கட்கிழமை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2 ஆம் திகதி இன்று புதன்கிழமை மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரச கட்டடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. குஜராத்தில் இன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாமல் ரத்துச் செய்யப்பட்டது.