SuperTopAds

காதலனுக்கு விஷம் வைத்து கொலை செய்த காதலி!! -பொலிஸாரையும் மிரளவைத்தால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
காதலனுக்கு விஷம் வைத்து கொலை செய்த காதலி!! -பொலிஸாரையும் மிரளவைத்தால் பரபரப்பு-

இளம் பெண் ஒருவர் தனது காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, பாறசாலை முறியன் கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (வயது 22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாரோன்ராஜ் தனது நண்பருடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து திரும்புகையில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது நண்பர் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொன்று சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனையடுத்து இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கிரீஷ்மாவின் குடும்பத்தினர்தான் திட்டமிட்டு அவர்களது மகனை கொன்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். மேலும், கிரீஷ்மாவின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்துவிடுவார் எனவும் என கூறப்பட்டதால்,

காதலனை கொன்றுவிட்டு இராணுவ வீரர் ஒருவருக்கு காதலியை திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஷாரோன்ராஜின் காதலியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்தோம். திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தோம். அதனால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் பெற்றோர் எனக்கு இராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.

அதனை இவரிடம் தெரிவித்து என்னை மறந்துவிடும்படி கூறினேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். இதனால் வீட்டிற்கு அழைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தேன் என்றார். அதன் அடிப்படையில், பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் கிருமிநாசினியை குடித்து கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விசாரணையில் இருந்து தப்பிக்க நாடகமா என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.