SuperTopAds

பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அதிகரிக்கலாம்!! -மத்திய உளவுத்துறை எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அதிகரிக்கலாம்!! -மத்திய உளவுத்துறை எச்சரிக்கை-

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்த சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப் எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சேர்க்கும். இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் நிதி உதவிகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

2018 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருந்தது. அண்மையில் இந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

இந்நிலையில் எப்.ஏ.டி.எப்-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.