காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே

ஆசிரியர் - Editor II
காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே

இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலி; வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

குறித்த தேர்தல் கடந்த 17 ஆம் திகதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த 19 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று புதிய காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு 7,897 வாக்குகள் கிடைத்தது. சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்றார்.

இதையொட்டி அவர் இன்று காலையில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்கும் விழா நடந்தது. அதில் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மல்லிகார்ஜூன கார்கேவிடம் மத்திய தேர்தல் குழு தலைவர் மது சூதனன் மிஸ்திரி வழங்கினார். கட்சியின் தலைவர் பதவியை விட்டு சென்ற சோனியா காந்தி அவரிடம் முறைப்படி தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.

மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு