ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி!! -அதிர்ச்சியடைந்த பெற்றோர்-

ஆசிரியர் - Editor II
ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி!! -அதிர்ச்சியடைந்த பெற்றோர்-

மேற்குவங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொள்வதற்கு ஆசைப்பட்ட சிறுமி ஒருவர் அதற்கான தனது ரத்தத்தை விற்க முயற்சித்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அம்மாநிலத்தில் தாபான் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை பேருந்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர் காட் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தம்பியின் மருத்துவசெலவுக்கு பணம் தேவைப்படுவதால் தனது ரத்தத்தை விற்க வந்ததாக கூறினார். அசரின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்ட ஊழியர்கள் அது குறித்த விசாரித்துள்ளனர். 

சிறுமியிடம் விசாரித்த போது அவர் இணையத்தில் 9 ஆயிரம் ரூபா மதிப்புள்ள ஸ்மார்ட் போன் முற்பதிவு செய்ததும், அதை வாங்குவதற்கு பணம் தேவைப்படுதால் ரத்தத்தை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு