SuperTopAds

ஜெயலலிதாவின் மரணம்!! -சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதாவின் மரணம்!! -சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை-

உயிரிழந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைசர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார். 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில் சசிகலா, வைத்தியர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.