பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவருடத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும்!! -பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு-

ஆசிரியர் - Editor II
பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவருடத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும்!! -பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவு-

பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவருடத்திற்குள் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்து பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 26 வயது நபருக்கு மும்பை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 26 வயது நபரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் 2018 ஆம் ஆண்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

கர்ப்பமடைந்ததை தனது காதலனிடம் கூறி திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். இருப்பினும் காதலியை திருமணம் செய்துகொள்ளாமல் அந்த நபர் தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு 2020 ஜனவரி 27 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. ஆனால், ஜனவரி 30 ஆம் திகதி தன் குழந்தையை வைத்தியசாலைக்கு அருகே வைத்துவிட்டு அந்த பெண் தலைமறைவாகியுள்ளார். அந்த குழந்தை காப்பகத்தில் வளர்க்கப்பட நிலையில் தற்போது அந்த குழந்தை தத்துகொடுக்கப்பட்டது.

பின்னர், பெப்ரவரி மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது அந்த பெண் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் காதலனை பொலிஸார் கைது செய்தனர். 

கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள அந்த இளைஞர், தனது காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனக்கு பிணை வழங்கக்கோரி மும்பை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனைகளுடன் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பிணை வழங்கினார். பிணைக்கான நிபந்தனையாக ஒரு வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணைண திருமணம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு