மின்வெட்டு நேரம் குறைப்பு! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரம் குறைப்பு! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு 

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி 15 & 16 ஆம் திகதிகள் – A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இந்நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளில் பகலில் 1 மணிநேரமும், 

இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு